மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பிக்பாஸ் சீசன் 6-ல் டிக்டாக் பிரபலமான தனலெட்சுமியும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். முதல் வாரத்திலேயே நேயர்களை முகம் சுளிக்க வைத்த தனலெட்சுமி, மறுவாரத்தில் குறும்படத்தின் மூலம் நல்ல பெயரை பெற்று வாழ்த்துகளை பெற்றார். தற்போது இந்த வாரத்தில் மீண்டும் தனது வன்மத்தை காட்ட ஆரம்பித்துவிட்டார். எனவே, அவர் மீது மீண்டும் நெகட்டிவான கமெண்டுகள் வர ஆரம்பித்துள்ளன. இதற்கிடையில் ஊடகமொன்றில் பேட்டிக்கொடுத்த தனலெட்சுமியின் நண்பர்கள் பிக்பாஸ் வீட்டில் தனலெட்சுமி சொல்லியதெல்லாம் பொய் என கூறியுள்ளனர்.
அதாவது, பிக்பாஸ் வீட்டில் முதல்வாரத்தில் கதை சொல்லும் டாஸ்க்கில் பேசியிருந்த தனலெட்சுமி தனக்கு அப்பா இல்லையென்றும், தன்னை அம்மா மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்ததாகவும் கூறியிருந்தார். மேலும், தன்னை மிகவும் ஏழை என்பது போல் காட்டிக்கொண்டார். ஆனால், அவரது நண்பர்கள் இதையெல்லாம் மறுத்துள்ளனர். அவர்கள் கூறியதிலிருந்து, தனலெட்சுமியின் நிஜ பெயர் சுகி. ஏழை என்று பிக்பாஸ் வீட்டில் சொல்லிய தனலெட்சுமி ஒரு ஜோடி செருப்புக்காக செலவழித்த தொகை மட்டும் 12000 ரூபாய். சொந்தமாக துணிக்கடை, பைனான்ஸ் தொழில் என செல்வ செழிப்புடன் மிகப்பெரிய வீட்டில் தான் தனலெட்சுமி வசித்து வருகிறார். அதுமட்டுமில்லை தனலெட்சுமி சில குறும்படங்களிலும் இரண்டு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அந்த இரண்டு திரைப்படங்களுமே தனலெட்சுமியின் சொந்த தயாரிப்பில் எடுக்கப்பட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதைதவிர சில மாதங்களுக்கு முன் ஷேன் ரோல்டன் இசையில் வெளியான 'பறை' என்கிற ஆல்பம் பாடலிலும் தனலெட்சுமி நடித்துள்ளார். ஆனால், இதையெல்லாம் மறைத்துவிட்டு பிக்பாஸ் வீட்டில் தன்னை மிகவும் சாதாரண பெண், பாவப்பட்ட ஏழை வீட்டு பெண் என்பது போல் காண்பித்து நடித்து வருகிறார்.