நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும், சின்னத்திரை நடிகை அக்ஷயா கிம்மியும் நெருங்கிய தோழிகள் ஆவர். இருவரும் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி ரீல்ஸ், போட்டோ என வெளியிட்டு வருகின்றனர். இந்திரஜாவும், அக்ஷயாவும் குண்டாக இருக்கும் காரணத்தால் பலரும் அவர்களை பாடிஷேமிங் செய்வது வழக்கம். ஆனால், அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இருவரும் இன்று திரைத்துறையில் சாதித்து வருகின்றனர். மேலும், இரண்டு பேருமே சிறப்பாக நடனமும் ஆடுவார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் சேர்ந்து டிரெண்டிங் பாடலான 'டூ டூடூ டூ டூடூ' பாடலுக்கு சூப்பராக குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளனர். சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் அந்த வீடியோவுக்கு சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் பாசிட்டிவான கமெண்டுகளை போட்டு இருவரையும் எங்கிரேஜ் செய்து வருகின்றனர்.