நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சமந்தா, வரலட்சுமி நடித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'யசோதா' வருகிற 11ம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ளார். ஹரி, ஹரிஷ் இயக்கி உள்ளனர். வாடகைத்தாய் பற்றிய படம். இந்த படத்தில் சமந்தா வாடகைத்தாய் மற்றும் போலீஸ் அதிகாரி என இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
படத்தின் சண்டை காட்சிகளை ஹாலிவுட் சண்டை இயக்குனர் யானிக் பென் வடிவமைத்துள்ளார். இவர் ஏற்கெனவே சமந்தா நடித்த பேமிலி மேன் வெப் தொடரில் சமந்தாவுக்கு சண்டை காட்சிகள் அமைத்தவர். டிரான்ஸ்போர்ட்டர் 3, கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷன், டன்கிர்க், ஷாருக்கானின் ரயீஸ், சல்மான் கானின் டைகர் சிந்தா ஹை உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.
”சமந்தா போன்று துணிச்சலும் அர்ப்பணிப்பும் மிக்க நடிகையை நான் கண்டது இல்லை. எத்தகைய ரிஸ்க்கையும் அவரே எடுக்க முன்வந்தார். டூப் தேவைப்படும் காட்சியில்கூட அவர் அதற்கு அனுமதிக்கவில்லை. இன்னொருவர் உழைப்பில் கிடைக்கும் புகழும், கைதட்டலும் எனக்கு வேண்டாம் என்று சொன்னார்” என சமந்தாவை புகழ்ந்து தள்ளுகிறார் யானிக் பென்.