ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
நடிகர் மோகன்லால் சினிமாவை தாண்டி தீவிரமான ஆர்வம் காட்டுவது என்றால் அது கால்பந்து விளையாட்டு தான். இதற்கு முன்பு கேரள கால்பந்து அணி விளையாடும்போதெல்லாம் அதை உற்சாகமாக புரமோட் செய்து வந்தார். இந்த நிலையில் வரும் நவம்பர் 20ம் தேதி கத்தாரில் பிபா (FIFA) உலக கோப்பை கால்பந்து போட்டி துவங்க உள்ளது. இதற்காக ஒரு இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி வருகிறேன் என ஏற்கனவே மோகன்லால் கூறியிருந்தார். தற்போது அந்த வீடியோ பாடல் ஆல்பம் வெளியாகி உள்ளது.
இந்தப்பாடலை மோகன்லால் பாடியுள்ளதுடன் அவரே இந்த முழு பாடலிலும் நடித்துள்ளார் என்பது தான் இதில் ஹைலைட். இந்த பாடலின் காட்சிகள் முழுக்க முழுக்க இளைஞர்களை, குறிப்பாக கால்பந்து வீரர்களை எப்படி பாசிட்டிவாக மோகன்லால் உற்சாகப்படுத்துகிறார் என்கிற விதமாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை பிரபல இயக்குனர் டீகே ராஜீவ்குமார் இயக்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற ஹிருதயம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரகுமானால் பாராட்டப்பட்ட ஹேசம் அப்துல் வகாப் இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார்.