நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான தலைவி படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் இவர் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் கன்னடத்தில் வெளியாக காந்தாரா ஆகிய படங்கள் குறித்து ஒரு கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், பொன்னியின் செல்வன், காந்தாரா படங்களில் வரும் காட்சிகள் ஹிந்து மற்றும் இந்திய தன்மை நிறைந்த காட்சிகளாக இடம்பெற்றுள்ளது. இந்த படங்கள் ஹிந்துமதம் தொடர்புடையதாக இருப்பதால்தான் அதிக அளவிலான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. மேலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் பாலிவுட் சினிமா நம்முடைய கலாச்சாரத்தில் இருந்து விலகி செல்கிறது. இதன் காரணமாகவே இந்திய தன்மையுடன் உருவாகும் தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் வெற்றி பெற்று வருகின்றன. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், நம்முடைய மக்கள் நம் கலாச்சார ரீதியான படங்களுக்கு வரவேற்பு கொடுக்க தொடங்கி விட்டார்கள் என்பது இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது என்று தெரிவித்துள்ளார் கங்கணா ரனாவத்.