Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ள கமல்

30 அக், 2022 - 01:13 IST
எழுத்தின் அளவு:
Kamal-will-be-acting-under-the-direction-of-HVinodh

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்த படத்தை தொடர்ந்து மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கப்போகிறார். இந்தியன்-2 படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த நேரத்தில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களை இயக்கியுள்ள எச்.வினோத் அடுத்தபடியாக கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக ஒரு தகவல் கோலிவுட்டில் வெளியாகி உள்ளது. ஒரு மாறுபட்ட ஆக்சன் கேம் குறித்த கதையை கமலிடத்தில் சொல்லி அவர் ஓகே பண்ணி விட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் இப்படம் குறித்த தகவல் துணிவு ரிலீசுக்கு பிறகு வெளியாகும் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அரசியல் கதையில் சூர்யாவின் வாடிவாசல் - வெற்றிமாறன் வெளியிட்ட புதிய தகவல்!அரசியல் கதையில் சூர்யாவின் ... பொன்னியின் செல்வன், காந்தாரா படங்களின் வெற்றிக்கு காரணம் - கங்கணா புது தகவல் பொன்னியின் செல்வன், காந்தாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)