நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தற்போது விஜய் சேதுபதி, சூரி நடித்துவரும் விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஏற்கனவே சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்திற்காக காளைகளுடன் அவருக்கு பயிற்சி கொடுத்து அது குறித்து வீடியோ காட்சிகளை வெளியிட்டார். இதனால் உடனடியாக வாடிவாசல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக இயக்குவதால் அதிக காலதாமதம் ஏற்பட்டது. இதனால் தற்போது சூர்யா, வணங்கான் மற்றும் சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நேரத்தில் வெற்றி மாறன் அளித்துள்ள ஒரு பேட்டியில், வாடிவாசல் 1960களில் நடைபெறும் கதையில் உருவாகிறது. குறிப்பாக இந்த படத்தில் ஜல்லிக்கட்டு மையமாக இருந்தாலும், அந்த காலகட்டத்தில் நடக்கும் அரசியல் கதையில் வாடிவாசல் உருவாகிறது என்று தெரிவித்திருக்கிறார் வெற்றிமாறன். அந்த வகையில் அரசியலை மையப்படுத்தி ஏற்கனவே அவர் இயக்கிய வடசென்னை, அசுரன் படங்களை போன்ற பீரியட் கதையில் சூர்யா நடிக்கும் வாடிவாசலும் உருவாகிறது.