இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான நேரம் மற்றும் பிரேமம் என இரண்டு படங்களை இயக்கியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் படம் வெளியாகி வெற்றி பெற்ற பின்னரும் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் படம் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன் தற்போது பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்டு என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் ஓணம் பண்டிகைக்கே வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பட வெளியீட்டில் தாமதம் ஏற்படும் என அல்போன்ஸ் புத்ரன் கூறியிருந்தார். அதுகுறித்து அவர் விளக்கம் அளித்தபோது ரசிகர்களுக்கு நல்ல ஒரு படைப்பை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தாமதம் என்றும் படத்தில் விஎப்எஸ் பணிகள் நிறைய இருப்பதால் இந்த தாமதம் அவசியமானதே என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த படத்தில் எடுக்கப்பட்ட சில முக்கியமான காட்சிகள் எடிட்டிங்கில் பார்த்தபோது அல்போன்ஸ் புத்ரனுக்கு திருப்தி அளிக்காததால் மீண்டும் அந்த காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளாராம். அந்த காட்சிகளில் பிரித்விராஜுடன் நயன்தாராவும் நடிக்க வேண்டியிருப்பதால் அது குறித்த தேதிகளை முடிவு செய்ய காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அந்த காட்சிகளை மீண்டும் படமாக்கிய பின்னரே படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ மறு அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.