நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். அந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம், அதைத்தொடர்ந்து கமலின் தூங்காவனம், பின்னர் த்ரிஷ்யம் 2 ஆகிய படங்களிலும் நடித்தார். இப்போதும் சீரான இடைவெளியில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஆஷா சரத், அவரது மகள் உத்தராவும் 'கெத்தா என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அம்மாவைப் போலவே இவரும் நடனத்தில் வல்லவர். பிட்ஸ் பிளானியில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார்.
இன்னொரு பக்கம் மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வரும் உத்தரா கடந்த வருடம் நடைபெற்ற அழகிப்போட்டி ஒன்றில் கலந்து கொண்டு ரன்னர் ஆக வெற்றி வெற்றி பெற்றுள்ளார். இந்தநிலையில் உத்தராவுக்கும் ஆதித்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நேற்று கொச்சியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் மம்முட்டி, சுரேஷ்கோபி, திலீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.