நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த சரண்யா நாக், பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடிக்க தேர்வானார். ஆனால் அந்த ஆடிசனில் கடைசியாக வந்து சேர்ந்த சந்தியா தேர்வாகி விட சரண்யாக அவரின் பள்ளி தோழியாக நடித்தார். அதன் பிறகு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, துள்ளுற வயசு, மழைகாலம், ரெட்டை வாலு, ஈரவெயில் உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் சரண்யாவுக்கு அடையாளம் தந்தது பேராண்மை படம்தான்.
நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததால் வீட்டிலேயே முடங்கினார். இடையில் அவருக்கு திருமணமாகிவிட்டது என்றெல்லாம் தகவல்கள் பரவியது. அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. என்றாலும் சமூக வலைத்தளத்தில் பிசியாக இருக்கும் சரண்யா தனது தற்போதைய தோற்றத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளர். உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க முயற்சிக்கலாமே என்று அவர்கள் அவரை கேட்டு வருகிறார்க்கள்.