மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தமிழில் பிக்பாஸ் சீசன் 6 துவங்கியுள்ளது. இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள் என்பதால் இன்னும் சண்டை சச்சரவுகள் என பெரிய அளவில் ஆரம்பிக்கப்படவில்லை. இந்தநிலையில் இதற்கு முன்னதாக சில வாரங்களுக்கு முன்பே துவங்கிய தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நாகார்ஜுனா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
வழக்கம்போல இந்த வாரம் தலைவரை தேர்ந்தெடுக்கும் கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. வீட்டில் உள்ள போட்டியாளர்களை இரண்டு குழுவினராக பிரித்து அதில் ஒரே நேரத்தில் ஒவ்வொரு டீமில் இருந்தும் ஒருவரை அழைத்து ஒரு சுவற்றில் போஸ்டர் ஒட்டும் வேலை கொடுக்கப்பட்டது. இந்த போட்டியில் பெரும்பாலும் அனைத்து போட்டியாளர்களும் சுவாரஸ்யம் குறைவாகவே நடந்து கொண்டனர். அநாகரிகமாக சண்டையும் போட்டனர்.
ஒரு கட்டத்தில் இவர்கள் செயலால் கடுப்பான பிக்பாஸ் போட்டியாளர்களை அழைத்து உங்களில் யாருக்காவது இந்த பிக்பாஸ் போட்டியில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்றால் அவர்கள் தயவுசெய்து வெளியேறி விடுங்கள் என்று கூறியதுடன் வாசற்கதவையும் திறந்து விட்டார். பிக்பாஸின் இந்த செயலால் அதிர்ச்சியான போட்டியாளர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். இருந்தாலும் கோபம் குறையாத பிக்பாஸ் இந்த வார கேப்டன்சி டாஸ்க்கை கேன்சல் செய்தார். அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் புதிய தலைவர் என யாரும் தேர்ந்தெடுக்கப்படாமலேயே நிகழ்ச்சி தொடர்கிறது.