நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள சினிமாவில் கடந்த 2016ல் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புலிமுருகன். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் மலையாள படங்களின் பட்ஜெட்டும் வியாபார எல்லையும் விரிய ஆரம்பித்தது. இந்தப்படத்தை இயக்குனர் வைசாக் இயக்கி இருந்தார்.
இந்தநிலையில் ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் மோகன்லாலை வைத்து மான்ஸ்டர் என்கிற படத்தை இயக்கியுள்ளார் வைசாக். புலிமுருகன் படத்திற்கு கதை எழுதிய கதாசிரியர் உதயகிருஷ்ணா தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார். இவர்கள் மூவரின் கூட்டணி மான்ஸ்டர் மூலம் திரும்பிவந்து இருப்பதால் ரசிகர்கள் புலி முருகன் படத்தை போன்றே இந்த படத்தையும் மாசாக எதிர்பார்க்கிறார்கள்..
இந்த படம் நாளை அக்டோபர் 21ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் வைசாக் ஒரு பேட்டியில் கூறும்போது, “இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, இந்த படம் புலி முருகனுக்கு சமமாக இருக்குமா இல்லை புலி முருகனை விட மேலாக இருக்குமா என்பது போன்ற கேள்விகள் தான் அதிகம் வருகிறது. புலிமுருகன் படத்துடன் இந்த படத்தை தயவுசெய்து ஒப்பிட வேண்டாம்.. புலிமுருகன் முழுக்க முழுக்க ஆக்ஷன் படம். ஆனால் மான்ஸ்டர் ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர்.
இந்த படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகள் மட்டுமே உள்ளன. அதேசமயம் இந்த இரண்டு சண்டைக்காட்சிகளும் மலையாள சினிமாவில் இதுவரை பார்த்திராத, இதுவரை யாரும் முயற்சித்த புதுமையான வகையில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படம் புலன் விசாரணை சம்பந்தமான படம் என்பதால் ரசிகர்கள் படம் துவங்கியதிலிருந்து சற்றே பொறுமையுடன் இந்த படத்துடன் பயணித்தால் பல அற்புதமான விஷயங்கள் அவர்களுக்காக இதில் காத்திருக்கின்றன” என்று கூறியுள்ளார்.