நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த 2016ல் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான புலிமுருகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று மலையாள சினிமாவில் 100 கோடி வசூல் இலக்கை எட்டிய முதல் படம் என்கிற பெருமையையும் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் வைசாக் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மம்முட்டியை வைத்து அவர் இயக்கிய மதுர ராஜா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. தற்போது மோகன்லாலை வைத்து வைசாக் இயக்கியுள்ள மான்ஸ்டர் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் அடுத்ததாக பிரித்விராஜை வைத்து படம் இயக்குகிறார் வைசாக். இந்த படத்திற்கு கலிபா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரித்விராஜின் பிறந்தநாளான நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2010ல் மம்முட்டி, பிரித்விராஜ் இருவரும் இணைந்து நடித்த போக்கிரி ராஜா என்கிற படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார் வைசாக். அந்த வகையில் 12 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.