நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சென்னை : 'நடிகை நயன்தாரா இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவான விவகாரத்தில், நான்கு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரக சேவை பணிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு திருமணமாகி, நான்கு மாதங்கள் ஆகின்றன. இந்த நான்கு மாதங்களிலேயே, இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக, விக்னேஷ் சிவன் தகவல் வெளியிட்டார். வாடகை தாய் சட்டப்படி, திருமணமாகி ஐந்து ஆண்டுகள் வரை குழந்தை பேறு இல்லாதவர்கள் மற்றும் தம்பதியில் ஒருவருக்கு, குழந்தைபேறுக்கு தகுதி இல்லாத பட்சத்தில், உரிய விதிகளை பின்பற்றி வாடகை தாய் வாயிலாக குழந்தை பெறலாம்.
ஆனால், நயன்தாரா விவகாரத்தில், திருமணமான நான்கு மாதங்களிலேயே வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றது, பல்வேறு சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதுகுறித்து, மருத்துவம் மற்றும் ஊரக சேவை பணிகள் இயக்ககத்தின் சார்பில், மூவர் குழு விசாரணை நடத்தி வருகிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும், 2016ல் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்தாண்டு டிச., மாதமே வாடகை தாயை பதிவு செய்து குழந்தை பெற்றதாகவும், விசாரணையில் தகவல் வெளியானது. இந்த தகவலை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து, மருத்துவம் மற்றும் ஊரக சேவை பணிகள் இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து, இதுவரை எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. நாங்களும் அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை. அவர்கள், எந்த மருத்துவமனை வாயிலாக, வாடகை தாய் நியமித்து, குழந்தை பெற்றனர் என, விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை அறிக்கை தயாரிக்கும் பணி முடிந்த பின் தான், அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். வரும் நான்கு நாட்களில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசிடம் தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.