நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் ரோஷாக் என்கிற படம் வெளியானது. நிசாம் பஷீர் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக உருவாகி இருந்தது. தனது கர்ப்பிணி மனைவியின் மரணத்திற்கு காரணமான எதிரியை மம்முட்டி பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதை உளவியல் கண்ணோட்டத்தில் படமாக்கியுள்ளார்கள். குறிப்பாக இந்த படத்தை சாதாரண ரசிகன் புரிந்து கொள்வது சற்று சிரமம் என்று கூட சொல்லலாம்.
இந்த நிலையில் இந்த படத்தில் மம்முட்டியின் மனதிற்கு அடிக்கடி எதிரியாக தோன்றும் சாக்கு முகமூடி அணிந்த உருவம் ஒன்று பல காட்சிகளில் நடித்து இருந்தது. இந்த கதாபாத்திரத்தில் பிரபல மலையாள இளம் நடிகர் ஆசிப் அலி தான் நட்புக்காக நடித்திருந்தார். படம் வெளியான பின்னர்தான் இந்த தகவலே வெளியானது.
இவரது நடிப்பு குறித்து சமீபத்தில் பாராட்டிய மம்முட்டி, “படத்தில் நடித்த மற்றவர்கள் அனைவருக்கும் தங்கள் உடல்மொழி மூலமாக நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு இருந்தது. அதே சமயம் ஆசிப் அலி தனது உருவத்தைக் காட்டாமல் நடித்து இருந்தாலும் தனது கண்களிலேயே அபரிமிதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்” என்று புகழ்ந்து கூறினார்.
இந்த ஆசிப் அலி தான் தற்போது பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி வரும் கூமன் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.