நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பரத், வாணி போஜன் இணைந்து நடித்துள்ள படம் மிரள். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.டில்லி பாபு படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி பேனரில் தயாரித்துள்ளார், சக்தி பிலிம் பேக்டரி இந்த படத்தை வெளியிடுகிறது. எம்.சக்திவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரசாத், இசையமைத்துள்ளார். சுரேஷ்பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் எம்.சக்திவேல் கூறியதாவது: பரத்தும், வாணி போஜனும் கணவன், மனைவி, அவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சென்னையில் வாழும் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் இருக்கிறது. இதனால் குல தெய்வ கோவிலில் பூஜை செய்து வழிபடுவதற்காக தென்காசிக்கு வருகிறர்கள். பூஜை முடிந்து அந்த பகுதியில் கள்ள காற்றாலை வழியாக இரவு நேரத்தில் திரும்புகிறார்கள்-. அப்போது அவர்களுக்கு ஏற்படும் திரிலான அனுபவங்கள், அதிலிருந்து அவர்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
இதுவரை காற்றாலை பின்னணியில் எந்த படமும் வந்தில்லை. 24 நாள் வரை காற்றாலை பகுதியிலேயே படப்பிடிப்பு நடந்தது. 150 அடி உயரத்தில் காற்றாலை செட் போட்டு படமாக்கினோம். வித்தியாசமான த்ரிலர்லர் அனுபவமாக படம் இருக்கும். என்றார்.