மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
நானே வருவேன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார் வெளிநாட்டு நடிகை எல்லி அவ்ரம். இந்த படத்தில் அவர் வில்லன் தனுசுக்கு ஜோடியாவும், வாய்பேச முடியாத பெண்ணாகவும் நடித்திருந்தார்.
சன்னி லியோன் கனடாவில் இருந்து வந்தார், எமி ஜாக்சன் லண்டனில் இருந்து வந்தார். அதுபோல எல்லி அவ்ரம் ஸ்வீடனில் இருந்து வந்திருக்கிறார். ஹிந்தி படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். ஹிந்தியில் வெளியான குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் காஜல் அகர்வாலின் தோழியாக நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் நானே வருவேன் படம் வெளிவந்திருக்கிறது.
இதுகுறித்து எல்லி அவ்வரம் கூறியிருப்பதாவது: பொதுவாக எனக்கு சவாலான விஷயங்கள் பிடிக்கும். இந்த கேரக்டருக்காக சைகை மொழி பேசி நடிக்க வேண்டும் என்றார்கள், அந்த சவால் எனக்கு பிடித்திருந்தது.. எல்லா உணர்ச்சிகளையும் கண்களாலேயே வெளிப்படுத்த வேண்டும். கற்றுக் கொண்டு நடித்தேன்.
யாருமே என்னை வெளிநாட்டு பெண் என்று பிரித்து பார்க்கவில்லை. இன்னொரு நாட்டுக்கு சென்று அங்கு வெற்றி பெறுவது மிகவும் கடினம். கடந்த 10 வருடமாக இந்திய சினிமாவில் வெளிநாட்டு நடிகைள் அதிகமாக பங்கேற்று வருகிறார்கள். அதேபோல இந்திய கலைஞர்களும் வெளிநாட்டு படங்களில் பணியாற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். இது மகிழ்ச்சி தரும் ஆரோக்கியமான விஷயம். தமிழில் தொடர்ந்து நடிக்கும் ஆர்வம் இருக்கிறது. நல்ல வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன். என்கிறார் எல்லி அவ்ரம்.