நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் ஆர்யா நடித்து சமீபத்தில் வெளியான கேப்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து விருமன் படத்தை இயக்கிய முத்தையாவின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கான முதற்கட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. அப்பணிகள் முடிவடைந்து இன்று (அக்.,9) பூஜையுடன் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.
யானை படத்தை தயாரித்த டிரம் ஸ்டிக் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இது ஆர்யாவின் 34வது படமாக தயாராகிறது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு' படத்தில் அறிமுகமான சித்தி இதானி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார்