நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சந்திரஹாசன் நடித்த தாதா 87 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ தற்போது இயக்கி உள்ள படம் பவுடர். இந்த படத்தில் நிகில் முருகன், வித்யா பிரதீப், சிங்கம் புலி, வையாபுரி, மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். லியாண்டர் லீ மார்டி இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் தற்போது டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் மனிதக் கறியை சமைத்து சாப்பிடும் கும்பலை போலீஸ் விரட்டி பிடிக்கும் கதையாக உருவாகி உள்ளது. அந்த கும்பல் யார்? எதற்காக மனிதனை மனிதனே சாப்பிடும் அளவுக்கு மாறினார்கள்? என்பதை போலீஸ் கண்டறிகிறது. ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி இருக்கும் பவுடர் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.