500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
மம்முட்டி நடிப்பில் ஏற்கனவே இந்த வருடத்தில் பீஷ்ம பருவம், சிபிஐ 5, மற்றும் புழு என மூன்று படங்கள் வெளியாகிவிட்டன. இந்த நிலையில் அடுத்ததாக அவர் நடித்துள்ள ரோர்ஸ்காட்ச் என்கிற படம் வரும் அக்டோபர் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்ட இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படத்தை நிசாம் பஷீர் என்பவர் இயக்கியுள்ளார்.
இவர் ஏற்கனவே இயக்கிய கட்டியோலானு எண்டே மாலாக்க என்கிற குடும்ப படத்திற்காக வெகுவாக பாராட்டப்பட்டவர். ஆனால் இந்த ரோர்ஸ்காட்ச் திரைப்படம் துவங்கப்பட்டதில் இருந்து வெளியான செய்திகளும், வெளியான போஸ்டர்களும் இந்த படம் நிச்சயமாக ஒரு சைக்கோ த்ரில்லராக இருக்கும் என்பதை தொடர்ந்து பறைசாற்றி வருகின்றன. மம்முட்டி இந்த படத்தில் இதுவரை ஏற்று நடித்திராத ஒரு வேடத்தில் நடித்துள்ளார் என்று இயக்குனர் நிசாம் பஷீர் ஏற்கனவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.