மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
எதிர்நீச்சல் தொடர் அவ்வப்போது சில சர்ச்சைகள் எழுந்து வருகிறது. முன்னதாக போட்டோகிராபர்களை இழிவுப்படுத்தியதாகவும், நடைமுறையில் இல்லாததை மிகைப்படுத்தி சொல்வதாகவும் குற்றசாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து ஏற்கனவே சீரியல் குழுவினர் விளக்கமளித்திருந்தனர்.
இந்நிலையில், அண்மையில் சிலர் இயக்குநர் திருசெல்வத்திடம் எதிர்நீச்சல் சீரியல் குறித்து சில கேள்விகளை எழுப்பியிருந்தனர். அதில், 'படித்த பெண்களை ஏன் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்க பார்க்கிறீர்கள்? இது போன்று இப்போதும் நடக்கிறதா?' என சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு பதிலளித்துள்ள திருசெல்வம், 'இதுபோன்ற சம்பவங்கள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நகர்ப்புறங்களில் வேண்டுமானால் குறைந்திருக்கலாம். கிராமப்புறங்களில் படித்த பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. என்னுடைய அனுபவத்திலிருந்து நான் இப்படி ஒரு கதையை எடுத்து இருக்கிறேன். இது என் வீட்டிலும் நான் பார்த்த பலர் வீட்டிலும் பெண்களுக்கு நடந்து இருக்கிறது. பெண்களை வீட்டிற்குள் அடைத்து வைப்பது என் நோக்கம் அல்ல. அப்படி அவர்களை நிர்பந்தித்து அடைத்து வைக்கும் போது அவர்கள் எடுக்கும் முடிவு பற்றி தான் இந்த சீரியலின் கருத்து இருக்கிறது' என்று கூறியுள்ளார்.
'எதிர்நீச்சல்' தொடர் ஒளிபரப்பான முதல் நாள் முதல் இப்போது வரை சீரியல் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக குடும்ப பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது கதாநாயகியின் தைரியமான எழுச்சியுடன் விறுவிறுப்பான அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.