நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரபல தெலுங்கு நடிகரான சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா தெலுங்கு சினிமாவில் 2007ல் சிருதா என்ற படத்தில் அறிமுகமானவர். அதையடுத்து ராஜமவுலியின் மகதீராவில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் ரங்கஸ்தலம், ஆர் ஆர் ஆர் என பல முக்கிய படங்களில் நடித்தவர் தற்போது ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் அரசியல் த்ரில்லர் கதையில் உருவாகி வருகிறது. இந்த நிலையில் செப்டம்பர் 28ம் தேதியான நேற்றோடு திரை உலகில் ராம்சரண் நடிகராகி 15 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார். இதையடுத்து திரை உலகினரும், ரசிகர்களும் சோசியல் மீடியாவில் அவரை வாழ்த்தி வருகிறார்கள். சிரஞ்சீவியும் தனது மகன் ராம்சரணை வாழ்த்தி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛மகதீராவிலிருந்து ரங்கஸ்தலம், ஆர்ஆர்ஆர் இப்போது ஷங்கருடன் ஆர்சி- 15 வரை சரண் எப்படி நடிகராக உருவெடுத்தார் என்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. ராம்சரணின் ஆர்வம், உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தான் எடுத்துக் கொண்ட பணியில் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ராம்சரண் மேலும் பல உயரங்களையும் பெருமைகளையும் அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார் சிரஞ்சீவி.