Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

லட்சுமி மஞ்சுவின் ரியாலிட்டி ஷோவில் மாளவிகா மோகனன்

25 செப், 2022 - 10:38 IST
எழுத்தின் அளவு:
Malavika-Mohanan-in-Lakshmi-Manchu's-reality-show

தெலுங்கு திரையுலகின் சீனியர் நடிகரான மோகன்பாபுவின் மகள் நடிகை லட்சுமி மஞ்சு. இவர் ஒரு பக்கம் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் படங்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜோதிகா நடித்த காற்றின் மொழி படத்தில் அவரது தோழியாக நடித்த லட்சுமி மஞ்சு, தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி உள்ள மான்ஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தெலுங்கில் ஷெப் மந்த்ரா சீசன் 2 என்கிற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க இருக்கிறார் லட்சுமி மஞ்சு. வரும் செப்டம்பர் 30ம் தேதி முதல் ஆஹா ஓடிடி தளத்தில் இதன் முதல் எபிசோட் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் மாளவிகா மோகனன், ரிது வர்மா மற்றும் வித்யுலேகா ராமன் உள்ளிட்டோர் முதல் எபிசோடில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி குறித்து லட்சுமி மஞ்சு கூறும்போது எங்கள் குடும்பமே உணவு பிரியர்கள் நிரம்பிய குடும்பம். அதனால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் எனக்கு அதிக மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் மீது டிவி தொகுப்பாளினி போலீசில் புகார்நடிகர் மீது டிவி தொகுப்பாளினி ... தொகுப்பாளினி மீது வார்த்தை தாக்குதல் நடத்திய நடிகர் கைது தொகுப்பாளினி மீது வார்த்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)