500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
காதல் பறவைகளாய் இருந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். விக்னேஷ் சிவன் அடுத்து நடிகர் அஜித்தின் 62வது படத்தை இயக்க தயாராகி வருகிறார். தற்போது கிடைத்துள்ள ஓய்வில் வெளிநாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கு இன்று(செப்.,18) பிறந்தநாள். இதையொட்டி திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு வரும் கணவரின் முதல் பிறந்தநாளை விமரிசையாக துபாயில் குடும்பத்தினர் உடன் கொண்டாடி உள்ளார் நயன்தாரா. துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா முன் மனைவி நயன்தாரா மற்றும் குடும்பத்தினர் உடன் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.
அதனுடன், ‛‛குடும்பத்தினரின் தூய்மையான அன்பால் நிறைந்த பிறந்தநாளாக எனக்கு இன்று அமைந்தது. என் தங்கமான மனைவி தந்த இன்ப ஆச்சரியமான பரிசு. குடும்பத்தினர் உடன் புர்ஜ் கலிபா முன் பிறந்தநாளை கொண்டாடினேன். இதைவிட சிறப்பாக பிறந்தநாளை கொண்டாட முடியாது. இறைவன் ஆசீர்வாதத்தால் அவர் தந்த அனைத்து அழகான தருணங்களுக்காக நன்றி சொல்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.