500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
மலையாளத்தில் வெளியான நேரம் மற்றும் பிரேமம் என இரண்டு படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். குறிப்பாக பிரேமம் படம் கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில் எட்டு வருடங்கள் கழித்து தற்போது பிரித்விராஜ், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் கோல்ட் என்கிற படத்தை இயக்கியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.
இந்த படம் கடந்த ஓணம் பண்டிகை அன்றே வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஓணம் பண்டிகைக்கு சற்று முன்னதாக, இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், இந்த படத்தின் பணிகள் இன்னும் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என்றும், ஓணம் பண்டிகைக்கு அடுத்த வாரமே இந்த படம் வெளியாகும் என்றும் ரசிகர்களிடம் சமாதானம் கூறியிருந்தார். இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் இதை நினைவூட்டி படம் எப்போது வெளியாகும் என தொடர்ந்து அவரிடம் சோசியல் மீடியாவில் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
அப்படி ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்ரன், “இன்னும் கொஞ்சம் கொஞ்சம் பணிகளே பாக்கி இருக்கின்றன. அவை முடிந்ததும் உடனடியாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் அரைகுறையாக வெந்த பலகாரத்தை சாப்பிட யாரும் விரும்ப மாட்டார்கள். நல்லபடியாக வெந்தபின் தரவேண்டும் என்பதே சமையர்காரனாகிய என் விருப்பம்.. ஏற்கனவே ஒரு தேதியை அறிவித்து அதில் படத்தை ரிலீஸ் செய்யாததற்கு மன்னிக்கவும்” என்று கூறியுள்ளார்.