மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தெலுங்கு திரையுலகின் பிரபல சீனியர் நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கிருஷ்ணம் ராஜு நேற்றுமுன்தினம் காலமானார். இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்தனர். கிருஷ்ணம் ராஜு நடிகர் பிரபாஸின் பெரியப்பா என்பது பலருக்கு தெரிந்திருக்கும். அவ்வப்போது அவர்கள் சந்தித்துக் கொள்ளும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வந்தன. இந்த நிலையில் பிரபாஸின் மிக நெருங்கிய தோழியான நடிகை அனுஷ்கா, கிருஷ்ணம் ராஜுவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்.
அதேசமயம் கிருஷ்ணம் ராஜுவின் மறைவுக்கு முதல் நாளன்று அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் அவரை பார்ப்பதற்காக பிரபாஸுடன் இணைந்து மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார் அனுஷ்கா. இவர்கள் இருவரும் கிருஷ்ணம் ராஜு அறையிலிருந்து வெளியே வரும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே மிர்ச்சி, பில்லா ஆகிய படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து இருந்தாலும் அதன்பிறகு பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களில் நடித்த பின்னர், இவர்கள்தான் திரையுலகில் மிகப்பொருத்தமான ஜோடி என்று பலராலும் பாராட்டப்பட்டனர். அதேசமயம் இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக இணைய வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் நடிகர் பிரபாஸ் தங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டுமே என்று எப்போதுமே கூறிவருகிறார். இந்தநிலையில் கிருஷ்ணம் ராஜூ மறைவிற்கு முன்பாக பிரபாஸுடன் இணைந்து அனுஷ்காவும் அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றது தற்போது இவர்கள் பற்றிய சில புதிய யூகங்களை கிளப்பி விட்டுள்ளது