நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

4 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த அமீர்கான் படம் லால் சிங் சத்தா. இந்த படம் புகழ்பெற்ற ஹாலிவுட் படமான பாரஸ்ட் ஹம்ப் படத்தின் ரீமேக். இந்த படம் 3 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்தது. சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் தயாராகி இருந்தது. இந்த படத்தை வயாகாம் 18 ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்து அமீர்கான் தயாரித்திருந்தார்.
கடந்த மாதம் 11ம் தேதி வெளிவந்த இந்த படம் படுதோல்வி அடைந்தது. இதுவரை 50 கோடி கூட வசூல் செய்யவில்லை என்கிறார்கள். இந்தியாவின் சகிப்புத்தன்மை குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமீர்கான் பேசி இருந்தார். இதனை சுட்டிக்காட்டி உருவான பாய்காட் லால்சிங் சத்தா என்ற ஹேஸ்டேக்தான் படத்தின் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒப்பந்தபடி தனக்கு பேசப்பட்ட சம்பளம் 100 கோடியை விட்டுக் கொடுக்க அமீர்கான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்தை தயாரித்த வயாகாம் நிறுவனம் பெரிய நஷ்டத்தில் இருந்து ஓரளவிற்கு தப்பித்து விட்டதாக கூறுகிறார்கள். தோல்விக்கு தானே பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறியுள்ள அமீர்கான் அடுத்த படத்தையும் வயாகாம் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.