நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தென்னிந்திய நடிகர்கள் நடித்த சில படங்கள் பான் இந்தியா படமாக இந்தியா முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்தன. 'புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப்' ஆகிய படங்கள் அதற்கு சிறந்த உதாரணமாய் அமைந்தது. அதே சமயம் 'பாகுபலி' மூலம் அந்த பான் இந்தியா கனவை தென்னிந்திய நடிகர்களுக்கு நனவாக்கிய பிரபாஸ் நடித்து வெளிவந்த 'ராதே ஷ்யாம்' படம் பெரும் தோல்வியைத் தழுவியது. அப்படத்தின் தோல்வி போலவே தற்போது 'லைகர்' படமும் தோல்வி அடைந்துள்ளது.
படம் கடந்த வாரம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. முதல் காட்சியிலேயே படத்தைப் பற்றி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். படம் தோல்வியைத் தழுவும் என்பதுதான் முதல் நாள் ரிப்போர்ட் ஆக வெளிவந்தது. இருந்தாலும் முதல் நாளில் 33 கோடி வசூலித்தது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதன் பிறகு படத்தின் வசூல் விவரங்களை அவர்கள் அறிவிக்கவில்லை. மாறாக படத்திற்கு வரவேற்பு கிடைப்பதாக மட்டுமே விளம்பரப்படுத்தி வந்தார்கள்.
இந்நிலையில் படத்தின் உண்மையான வரவேற்பு தெரியும் நாளான திங்கள் கிழமையான நேற்று இப்படத்திற்கு ரசிகர்களின் வருகை மிக மிகக் குறைவாகவே இருந்தது. எனவே, படம் இதற்கு மேலும் தேறாது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் முடிவு செய்துவிட்டார்கள். குத்துச் சண்டை போட்டியை மையமாகக் கொண்ட இந்தப் படம் எதுவுமே செய்யாமல் வசூலில் வீழ்ந்து போனது.