நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சமீபத்தில் தெலுங்கில் வெளியான கார்த்திகேயா-2 திரைப்படம் படக்குழுவினரே எதிர்பாராத வகையில் மிகவும் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது வரை சுமார் 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ள இந்த படம், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2014-ல் வெளியான, கார்த்திகேயா படத்தின் இரண்டாம் பாகமாக, இந்த படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நிகில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். சந்து மொண்டேட்டி என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகத்திலும் வரலாறு மற்றும் புராணம் ஆகியவற்றை மையப்படுத்தி பிக்சன் கதையாக இதை உருவாக்கி உள்ளார் இயக்குனர் சந்து மொண்டேட்டி. இந்தப்படம் ரசிகர்களை மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் உட்பட பலரையும் கவர்ந்துள்ளது. சமீபத்தில்கூட பவன் கல்யாண் இந்த படத்தை பார்த்துவிட்டு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குஜராத் முதல்வர் பூபேந்திர பாய் படேல் இந்த படத்தை பார்த்துவிட்டு வியந்து போய் பாராட்டியுள்ளார். குறிப்பாக கடவுள் கிருஷ்ணாவை இந்தப்படத்தில் உருவகப்படுத்திய விதம் தனக்கு பிடித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் படக்குழுவினரை நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் குஜராத்தில் தான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.