இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
கடந்த இரண்டு வருடங்களாக மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்த படங்கள் வரிசையாக ஓடிடி தளத்தில் மட்டுமே வெளியாகி வந்தன. அதில் சில படங்கள் வெற்றி, சில படங்கள் ஆவரேஜ் என்கிற வரவேற்பை பெற்றன. இந்தநிலையில் கடந்த மாதம் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்த கடுவா திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. பக்கா ஆக்சன் படமாக உருவாகியிருந்த இந்த படத்திற்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததுடன் ரூ.50 கோடி வசூல் கிளப்பிலும் இந்த படம் இணைந்தது.
அதனால் நேற்று பிரித்விராஜ் நடிப்பில் வெளியான தீர்ப்பு படத்திற்கும் அதே அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இதுவரை பிரித்விராஜின் படங்கள் முதல் நாள் வசூலாக குறைந்தபட்சம் ஒரு கோடிக்கு மேலும் அதிகபட்சமாக 2 கோடி வரையிலும் வசூலித்து வந்த நிலையில் தீர்ப்பு திரைப்படம் வெறும் 40 லட்சம் மட்டுமே வசூல் செய்திருப்பது திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்தனைக்கும் பிரித்விராஜின் கடுவா பட வெற்றி கொடுத்த எதிர்பார்ப்பில் எப்படியும் முதல் நாள் வசூல் ஒரு கோடியை தாண்டும் என கணக்கிடப்பட்ட நிலையில் படம் திருப்திகரமாக இல்லை என வெளியான விமர்சனங்களால் அடுத்தடுத்த காட்சிகளுக்கு வரவேற்பு குறைந்து வசூல் பாதிக்கப்பட்டதாக தியேட்டர்கள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
இத்தனைக்கும் மோகன்லாலை வைத்து பிரித்விராஜ் இயக்கிய லூசிபர் என்கிற ஹிட் படத்திற்கு கதை எழுதிய கதாசிரியரும், நடிகருமான முரளிகோபி தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார். நடிகர் சித்தார்த் மலையாளத்தில் முதன்முதலாக நுழைந்து திலீப்புடன் இணைந்து நடித்த கம்மர சம்பவம் என்கிற படத்தை இயக்கிய ரதீஷ் அம்பாட் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். லூசிபர் படத்தில் வொர்க் அவுட் ஆன முரளி கோபியின் கதை, தீர்ப்பு படத்திற்கு சரியான தீர்ப்பை வழங்கவில்லை என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.