இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. இதில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு சிங்கிள்கள் வெளியாகி வரவேற்பு பெற்றது. அதையடுத்து கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் சிம்பு. அவருடன் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் சிம்பு கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கிறார். தற்போது அப்படத்தின் கிளிப்ஸ் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கருப்பு நிற உடை அணிந்து பிளாக் பெப்பர் கெட்டப்பில் காணப்படுகிறார் சிம்பு. அதோடு அவரது மடியில் ஒரு சிறுமியை வைத்திருக்க, அவருக்கு பின்னால் நடிகை அனுசித்தாரா நின்று கொண்டிருக்கிறார். இந்த கிளிப்ஸ் வீடியோவை சிம்பு ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.