வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் மற்றும் மாயவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தற்போது தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.. இன்னும் திருமணம் ஆகாத லாவண்யா, அவ்வப்போது திருமண கிசுகிசுக்களில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரும் நடிகர் சிரஞ்சீவியின் மெகா குடும்பத்தின் உறுப்பினர்களின் ஒருவருமான வருண் தேஜூடன், லாவண்யா திரிபாதி காதலில் விழுந்துள்ளார் என்றும், இருவரும் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வருகிறது.
இந்தநிலையில் இந்த செய்தியை கேள்விப்பட்ட லாவண்யா திரிபாதி, உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் இப்போது வரை சிங்கிளாக தான் இருக்கிறேன்.. எனக்கு ஏற்ற ஒரு நபரை இன்னும் நான் கண்டுபிடிக்கவில்லை.. வருண் தேஜூடன் இரண்டு படங்களில் இணைந்து நடித்ததாலும் அவருடன் ஒரு சில நிகழ்ச்சிகளில் இணைந்து பங்கேற்றதாலும் இதுபோன்ற கதைகளை பரப்பி விடுகிறார்கள்.. இதை யார் செய்கிறார்கள் என்பதும் கூட எனக்கு நன்றாகவே தெரியும். இதுபற்றி எல்லாம் நான் அலட்டிக் கொள்ளப் போவதில்லை” என்று கூறியுள்ளார் லாவண்யா திரிபாதி.




