நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்கில் உப்பெனா என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கிர்த்தி ஷெட்டி. இந்த படத்தில் விஜய் சேதுபதி அவரது தந்தையாக நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் அதன்பிறகு அவருக்கு நான்கு படங்கள் புக்காகின. அதில் இரண்டு படங்கள் ஹிட் அடித்த நிலையில், அதையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் ராம்பொத்தனேனிக்கு ஜோடியாக நடித்த தி வாரியர் படம் வரவேற்பை பெறவில்லை.
அந்த படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நிதினுக்கு ஜோடியாக கிர்த்தி ஷெட்டி நடித்து கடந்த 12ம் தேதி வெளியாகியுள்ள மச்சேர்ல நியோ ஜெகவர்கம் என்ற படமும் தோல்வி அடைந்து விட்டது. இப்படி இரண்டு படங்கள் அடுத்தடுத்து கிர்த்தி ஷெட்டிக்கு தோல்வியாக அமைந்து விட்ட நிலையில் அடுத்தபடியாக தெலுங்கில் நடித்துள்ள ஆ அம்மை குறிஞ்சி மீக்கு செப்பளி என்ற படத்தை பெரிய அளவில் தான் எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் கிர்த்தி ஷெட்டி. இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அதோடு, தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான், நாகசைதன்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் படத்திலும் தற்போது கிருத்தி ஷெட்டி நடித்து வருகிறார்.