நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள், நடிகைகளுக்குப் பஞ்சமே இல்லை. தயாரிப்பாளர்களின் வாரிசு, இயக்குனர்களின் வாரிசு, நடிகர்களின் வாரிசு, நடிகைகளின் வாரிசு என பலரும் நிறைந்த திரையுலகம் இது.
வாரிசு நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் தான் முன்னணி நடிகையாக கடந்த சில ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய அம்மா மேனகா தமிழில் 80களில் சில படங்களில் கதாநாயகியாக நடித்து பின் மலையாளப் பக்கம் சென்றுவிட்டார்.
புதிய வாரிசு நடிகையாக நாளை வெளியாக உள்ள 'விருமன்' படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாக உள்ளார். முதல் படத்திலேயே முன்னணி நடிகரான கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். கார்த்தி, அதிதி இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் என்பது பலருக்கும் தெரியாது. சிறு வயதிலிருந்தே கார்த்தியைப் பார்த்து வளர்ந்தவர் தான் அதிதி.
ஒரு வாரிசு நடிகரும், வாரிசு நடிகையும் ஜோடி சேர்ந்துள்ள படம் தான் 'விருமன்'. போட்டிக்குப் பெரிய அளவில் வேறு எந்தப் படங்களும் இல்லாமல் 'விருமன்' வெளியாகிறது. அதிதிக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பது நாளை தெரிந்துவிடும்.