நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஹிந்தியில் அமீர்கான் நடித்துள்ள லால் சிங் தாத்தா என்ற படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வருகிற 11ந்தேதி வெளியிடுகிறது. இந்த நிலையில் சென்னையில் இப்படத்தின் பிரஸ்மீட் நடைபெற்ற போது, திமுக தமிழகத்தில் ஹிந்திக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் நீங்கள் ஒரு இந்தி படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறீர்களே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு உதயநிதி, ‛‛திமுக ஹிந்தி திணிப்பைதான் எதிர்க்கிறதே தவிர, ஹிந்தி படிக்க வேண்டாம் என்று யாரையும் சொல்லவில்லை. விரும்பினால் யார் வேண்டுமானாலும் ஹிந்தியை தாராளமாக படித்துக் கொள்ளலாம். ஆனால் ஹிந்தியை படித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை மட்டும் தான் திமுக எதிர்கிறது. இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட்டு தருமாறு அமீர்கானே வீடியோ காலில் அழைத்து பேசியதால் இதற்கு நான் ஒத்துக் கொண்டேன். அதோடு நான் அமீர்கானின் ரசிகனும் கூட. அதன் காரணமாகவே இந்த படத்தை வெளியிட சம்மதித்தேன்'' என்றார்.