நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஜெர்ரி என்ற படத்தில் அறிமுகமான காமெடி நடிகர் சதீஷ், அதன் பிறகு மதராசபட்டினம், மான் கராத்தே, வேலாயுதம், அண்ணாத்த, ரெமோ என பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் நாய் சேகர் என்ற படத்தில் அவர் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தில் சதீஷ் நடித்துக் கொண்டிருக்கும் போது, சுராஜ் இயக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக ரீஎன்ட்ரி கொடுக்க தயாரானார் வடிவேலு. அப்போது நாய் சேகர் என்பது வடிவேலு காமெடியனாக நடித்த கேரக்டர் பெயர் என்பதால் நாய் சேகர் என்ற டைட்டிலை விட்டுத்தருமாறு சதீஷ் படக்குழுவிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் இப்படத்திற்கு நாய் சேகர் என்ற டைட்டில் வைப்பதுதான் கதைப்படி பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி அதை விட்டுக் கொடுக்க சதீஷ் பட குழு மறுத்துவிட்டது.
அதையடுத்து திரைக்கு வந்த நாய் சேகர் படம் ரசிகர்களின் ஆதரவு பெற்று ஓரளவு வெற்றி பெற்றது. இந்த நிலையில் நாய் சேகர் படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக ஹீரோ என்பதற்கான விருதினை ஒரு தனியார் நிறுவனம் சதீஷ்க்கு வழங்கி இருக்கிறது. அந்த விருதுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் அவர்கள் வெளியிடு இருக்கிறார். கூடவே அந்த புகைப்படத்தில் அவரது மகளும் இடம் பெற்றுள்ளார். மேலும் இந்த விருது தனக்கு கிடைப்பதற்கு காரணமாக இருந்த நாய் சேகர் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் சதீஷ்.