இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
முன்பெல்லாம் பெரிய ஹீரோக்களின் படங்களில் இடம்பெறும் ஐட்டம் பாடல்களுக்கு என தனியாக கவர்ச்சி நடிகைகள் நடனமாடி வந்தனர். தற்போது பிரபல முன்னணி நடிகைகளே அப்படி ஒரு பாடலுக்கு ஆட தயங்குவதில்லை. அப்படி அவர்கள் ஆடும் அந்த பாடலும் பயங்கர ஹிட் ஆகி அவர்களுக்கு இன்னும் அதிக மைலேஜ் தருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு ஆடிய சமந்தா ரசிகர்களிடம் இன்னும் அதிக வரவேற்பை பெற்றார்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கும் அப்படி ஒரு வரவேற்பு ‛ரா ரா ராக்கம்மா' பாடல் மூலம் கிடைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கன்னடத்தில் சுதீப் நடிப்பில் வெளியான விக்ராந்த் ரோனா படத்தில் இடம்பெற்ற ரா ரா ராக்கம்மா என்கிற பாடலுக்கு ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடனமாடி ரசிகர்களை கிரங்கடித்தார். இந்த பாடல் யூடியூபில் ஒவ்வொரு மொழியிலும் பல மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது. தியேட்டர்களிலும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் எழுந்து ஆட்டம் போடுகின்றனர். தனித்தனி வீடியோவாகவும் பலர் இந்தப்பாடலுக்கு ஆடி சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த வரவேற்பை பார்த்து அதிசயித்து போன ஜாக்குலின் பெர்னாண்டஸ், இதனை தொடர்ந்து இப்படி ஒரு பாடலுக்கு தனக்கு நடனம் வடிவமைத்து கொடுத்ததற்காக நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். பீஸ்ட் படத்தில் இடம்பெற்று சூப்பர் ஹிட்டான அரபிக்குத்து பாடலுக்கும் ஜானி மாஸ்டர் தான் நடனம் வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.