பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
முதன்முதலாக இந்தியாவிலேயே தயாராகியுள்ள விமானம் தாங்கி போர்க்கப்பல் ‛ஐஏசி விக்ராந்த்' கொச்சியில் நடைபெற்று வந்த இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இந்திய கடற்படை வசம் ஒப்படைக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் மோகன்லால் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலை நேற்று பார்வையிட்டார். அவருக்கு கடற்படை அதிகாரிகள் மிக சிறப்பான வரவேற்பு அளித்தனர். மோகன்லாலுடன் ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ அதிகாரியும் பிரபல திரைப்பட இயக்குனருமான மேஜர் ரவியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
மோகன்லாலை பொறுத்தவரை ராணுவத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சில ராணுவப்படங்களில் நடித்திருக்கிறார். அதனால் 2009ம் ஆண்டில் இந்திய தரைப்படை மோகன்லாலுக்கு லெப்டினன்ட் கலோனல் (துணைநிலை படை அதிகாரி) பட்டத்தை அளித்து கவுரவித்தது. இதனை தொடர்ந்து மோகன்லாலும் அந்த கவுரவத்துடன் அவ்வப்போது ராணுவம் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில்தான் தற்போது இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலையும் பார்வையிட்டுள்ளார் மோகன்லால்.