ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

மலையாளத்தில் டொவினோ தாமஸ், கல்யாணி பிரியதர்ஷன் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் 'தள்ளுமால'. இந்த படம் தொடர்பாக இதுவரை வெளியான போஸ்டர்களும் பாடல்களும் கலர்புல்லாகவும் பார்ப்பதற்கே வித்தியாசமானதாகவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்த படத்தை காலித் ரகுமான் என்பவர் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்னதாக மம்முட்டி நடித்த 'தி கிரேட் பாதர்' என்கிற படத்திற்கு கதை எழுதியதுடன் மம்முட்டி நடித்த உண்ட என்கிற வித்தியாசமான படத்தையும் இயக்கி அவற்றின் தனித்துவமான கதை உருவாக்கத்திற்காகவே ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார்.
இந்த நிலையில் அவர் இயக்கியுள்ள படம் தான் 'தள்ளுமால'. வரும் ஆகஸ்ட் 12ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படம் சென்சார் சான்றிதழுக்காக அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்தின் மேக்கிங்கை பார்த்து பிரமித்து போனதாகவும் மலையாள சினிமாவில் இதுவரை இந்த வகையில் ஒரு படம் வந்ததில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளதாக தற்போது சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் ரசிகர்களுக்கு சிலிர்ப்பூட்டும் என சென்சார் அதிகாரிகள் கூறியுள்ளார்களாம்.