நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தென்னிந்தியத் திரைப்படங்கள் பான்-இந்தியா படங்களாக வெளியாகி ஹிந்தியிலும் வசூல் சாதனையைப் புரிந்தன. 'புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய படங்களி ஹிந்தியில் பெரிய வசூலைப் பெற்றன. அதே சமயம் சில முக்கியமான நேரடி ஹிந்திப் படங்கள் அங்கு தோல்வியைத் தழுவின. அது தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இது குறித்து நடிகர் ஆமீர்கானிடம் சமீபத்தில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆமீர், “மோசமான படங்கள், ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத படங்கள் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதை வரலாற்றைப் பார்த்தாலே தெரியும். அதுதான் நடந்துள்ளது. 'புஷ்பா, த காஷ்மீர் பைல்ஸ், கங்குபாய் கத்தியவாடி, பூல் புலையா 2' ஆகிய படங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டன. அதனால், அவை பாக்ஸ் ஆபீசிலும் வசூலை அள்ளின,” என்று தெரிவித்துள்ளார்.
ஆமீர்கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' படம் அடுத்த வாரம் பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது. இதற்கு முன்பு பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஆமீர்கானின் இந்தப் படம் எப்படி வரவேற்பைப் பெறப் போகிறது என்பது குறித்து பாலிவுட்டினர் கூட மிகவும் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.