நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள நடிகரான சுரேஷ்கோபி கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசியலில் இறங்கியதால் சினிமாவில் சிறிய இடைவெளி விட்டார். இருந்தாலும் மீண்டும் முன்பு போல பிஸியாக நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல இயக்குனர் ஜோஷிம் டைரக்ஷனில் சுரேஷ்கோபி நடித்த பாப்பன் என்கிற திரைப்படம் வெளியானது. இது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் கேரளாவில் தற்போது பெய்துவரும் அடை மழையிலும் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க இப்போது வெளியாகியுள்ள பாப்பன், வெளியாக உள்ள ஒத்தக்கொம்பன், தமிழில் நடித்து வரும் தமிழரசன், இதற்கு முன் வெளியான காவல் என இவரது படங்கள் நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து ஒவ்வொன்றாக நிறைவு பெற்று வந்த நிலையில், குறுகிய காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மே ஹூம் மூஸா என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக முடிவுபெற்று தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகளையும் முடித்துள்ளார் சுரேஷ்கோபி. நடிகர் பிஜுமேனனை வைத்து அரசியல் நையாண்டி படமாக உருவான வெள்ளிமூங்கா படத்தை இயக்கிய ஜிபு ஜேக்கப் தான் இந்த படத்தை இயக்கி உள்ளார்.