'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி வெளிவந்த படம் 'ஜிகர்தண்டா'. இப்படம் வெளிவந்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதைப் பற்றிக் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு படத்தின் இரண்டாம் பாகம் பற்றி அறிவித்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
'ஜிகர்தண்டா' படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், 'இறைவி, மெர்க்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், மஹான்' ஆகிய படங்கள் வெளிவந்தன. கடைசி இரண்டு படங்கள் ஓடிடியில் வெளிவந்ததால் வியாபார ரீதியாக அந்தப் படங்களைப் பற்றி அதிகம் பேச முடியாது. அதற்கு முன்பு வெளிவந்த படங்களில் 'பேட்ட' படம் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்தது.
வேறு படம் எடுப்பதைக் காட்டிலும் பலரது பாராட்டையும், வரவேற்பையும் பெற்ற 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும் என கார்த்திக் நம்பிக்கை வைத்திருக்கிறார் போலிருக்கிறது. அப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் பாகப் படத்தில் நடிப்பது யார் யார் என்ற அறிவிப்பை கார்த்திக் இன்னும் வெளியிடவில்லை.