நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடித்து வருகிறவர் அஸ்வதி பாபு. கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். தமிழ் நாட்டில் மீரா மிதுன், ஆந்திராவில் ஸ்ரீரெட்டி போன்று மலையாளத்தில் பரபரப்புக்கு பெயர் பெற்றவர் இவர்.
4 ஆண்டுகளுக்கு முன் தனது வீட்டில் பாலியல் தொழில் நடத்தியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறை தண்டனை பெற்று பின்பு விடுதலை ஆனார். மது போதைக்கு அடிமையான அஸ்வதி பாபு பலமுறை போதை பொருளுடன் போலீசிடம் சிக்கி உள்ளார். இது தொடர்பான வழக்குகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை அஸ்வதி தனது புதிய காதலன் நவுவலுடன் கொச்சி நகருக்குள் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. இதை கண்ட பொதுமக்கள் காரை துரத்தி பிடிக்க முயன்றனர். அப்போது கார் டயர் வெடித்து நின்றது. அதில் இருந்து இறங்கிய அஸ்வதியும், காதலன் நவுபலும் இறங்கி ஓடி தலைமறைவானார்கள். விரைந்து வந்த போலீசார் மறைந்திருந்த இருவரையும் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர். மருத்துவ பரிசோதனையில் இருவரும் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரையும் கைது செய்த போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள்.