இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் ஜூலை 1ம் தேதி திரைக்கு வந்த படம் ‛யானை'. இந்த படத்துக்கு எதிராக சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜோபாய் கோமாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அந்த மனுவில் ‛யானை' படத்தில் ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடம், பாம்பன் பகுதி மீனவர்கள் ஏதோ சமூக விரோதிகளை போல சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். மீனவர்களை கூலிப்படைகளாகவும், குழந்தைகளை தவறாக பயன்படுத்துபவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த படத்தில் சில காட்சிகள் மத உணர்வுகளை புண்படுத்து வகையில் இடம் பெற்றுள்ளது. கச்சத் தீவு பிரச்சனை இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது . அவர்கள் அதை கூறியுள்ள விதம் தங்களது உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக அவர் அந்த மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார்.
அதோடு, கடலை நம்பி கடலையே வாழ்வாதாரமாகக் கொண்டு உயிரை பணயம் வைத்து மீன் பிடித்து ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் அன்னியச் செலவாணி ஈட்டி வரும் தங்களை சமுதாயத்தில் விழிம்பு நிலை மக்களான மீனவர்களை அவமதிக்கும் வகையில் இந்த யானை படத்தில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதனால் அந்த காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும். இந்த படத்தை தொடர்ந்து திரையிட தடை விதிக்க வேண்டும் என்பதுடன் படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியிருக்கிறார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விஸ்வநாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் காணொளி காட்சி மூலம் ஆஜராவதில் இடையூறு ஏற்பட்டது. அதனால் இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி தள்ளி வைத்தார்கள்.