மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கரண் ஜோஹர். வாரிசு நடிகர்கள், நடிகைகளுக்கு மட்டுமே தன் படங்களில் அதிகமாக வாய்ப்புகளைக் கொடுப்பவர் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. பிரபல பாலிவுட் ஹீரோவான சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட போது கரண் மீதான 'நெப்போட்டிசம்' விமர்சனங்கள் அதிகம் இருந்தது.
சமீபத்தில் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ஓடிடி நிகழ்ச்சியான 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொண்டார். அப்போது ஒரு கேள்விக்கு பதிலளித்த சமந்தா “தென்னிந்தியாவின் மிகப் பெரிய ஹீரோயின் சமந்தாவுடன் இணைந்து நடித்த போது,“ என்று பேசினார். அப்போது இடை மறித்த கரண், நயன்தாரா தன்னுடைய லிஸ்ட்டில் இல்லை என்றார். அதை சமாளித்து சமந்தா தொடர்ந்து பேசினார்.
நயன்தாரா பற்றி கரண் சொன்னது குறித்து நயன்தாரா ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். “ஆலியா பட் போன்ற வாரிசு நடிகைகள்தான் உங்களுக்குத் தெரியும், தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அவரைப் பற்றித் தெரிந்து கொண்டு பேசுங்கள் கரண், நயன்தாரா சுயமாக முன்னேறியவர், வாரிசு நடிகை அல்ல,” என்றும் பலரும் பலவிதமான கமெண்ட்டுகளை அளித்துள்ளனர்.
நயன்தாரா தற்போது ஷாரூக்கான் ஜோடியாக 'ஜவான்' ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.