நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே. நாராயணா கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் சிரஞ்சீவியை 'அரசியல் புரோக்கர்' என்று விமர்சித்திருந்தார். இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சிரஞ்சீவி ரசிகர் மன்றத்தினரும், தெலுங்கு திரையுலகமும் நாராயணாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தது. பல இடங்களில் சிரஞ்சீவி ரசிகர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் தனது கருத்தை வாபஸ் பெற்றதோடு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் நாராயணா. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: அரசியல் தலைவர்கள் போட்டியாளர்களை விமர்சிப்பது சகஜம். எனது சமீபத்திய கருத்துக்களால் சிரஞ்சீவியின் ரசிகர்கள் மற்றும் கபு சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் புண்பட்டுள்ளனர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம். ஆனாலும் , நான் மொழியின் வரம்புகளைத் தாண்டியிருக்கக் கூடாது. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்று அவர் தெரிவித்திருக்கிறார்.