Advertisement

சிறப்புச்செய்திகள்

விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! | அரசியலில் கலக்க வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா! | கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

ஜீவா-ஜெயம்ரவி நடிக்கும் "தூக்கு தண்டனை"?

Jananathans next film thooku thandanai with jayam ravi and jeevaஇயற்கை, ஈ, பேராண்மை என்ற ஹாட்ரிக் வெற்றிகளைக் கொடுத்தவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். பேராண்மைக்கு பிறகு அடுத்து அவர் படம் இயக்கவில்லை. அவரது உதவியாளர் கல்யாண கிருஷ்ணன் இயக்கி வரும் பூலோகம் படத்துக்கு வசனம் எழுதுகிறார். அடுத்த படம் மிகப்பெரிய பட்ஜெட் என்பதால் அதன் திரைக்கதை அமைக்கும் பணியை செய்து வந்தார். ஜனநாதனின் அடுத்த படத்தில் ஜீவாவும், ஜெயம் ரவியும் இணைந்து நடிக்கிறார்கள். இதற்காக ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஜீவாவும், ஜெயம்ரவியும் இதனை தங்களின் மீடியா நேர்காணலில் தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஜீவா ஈ படத்திலும், ஜெயம்ரவி பேராண்மை படத்திலும் நடித்தனர். இரண்டு ஹீரோக்களுக்கும் அவைகள் வெற்றிப் படமாக அமைந்தது. அதோடு இருவரையும் ஆக்ஷன் ஹீரோக்காளக்கியது. அதனால் இருவருமே அவரது படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளனர். தொடர்ச்சியான கால்ஷீட் தேவை என்பதால் கைவசம் உள்ள படத்தை அவர்கள் முடிக்கட்டும் என்று ஜனநாதன் காத்திருந்தார். அதோடு படத்தின் பட்ஜெட் பெரியது என்பதால் தயாரிப்பாளர் கிடைப்பது சிரமமாக இருந்தது. இப்போது தயாரிப்பாளர் கிடைத்து விட்டதால் படத்தை துவங்கும் பணிகளில் மும்முரமாகி விட்டார்.

தூக்குத் தண்டனை தேவையா? தேவையில்லையா? என்பது சர்வதேச அளவில் பேசப்பட்டு வரும் ஒரு பிரச்சினை. அதன் பின்னணியில்தான் ஜனநாதனின் அடுத்த படம் என்கிறார்கள். தூக்குத் தண்டனை அவசியம் என்ற கருத்தில் ஒரு ஹீரோவும், தூக்குத் தண்டனை கூடாது என்று ஒரு ஹீரோவும் அவரவர் வாழ்க்கை அனுபவத்திலிருந்து சொல்வார்கள். இதில் எது சரி என்பதை தீர்மானிக்கிறது கிளைமாக்ஸ். இதுதான் கதை என்கிறது ஜனநாதனின் நெருங்கிய வட்டாரம்.

தற்போது "ஆதிபகவன்" படத்தை தயாரித்து வரும் அன்பழகன்தான் இந்தப் படத்துக்கும் தயாரிப்பாளர் என்றும் கூறப்படுகிறது. படத்துக்கு "தூக்கு தண்டனை" என்றே பெயர் வைக்கவும் ஜனநாதன் முடிவு செய்திருப்பதாக கூறுகிறார்கள். முறைப்படியான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று தெரிகிறது. படத்தின் பெயரும் மாறலாம். ஆதிபகவன் வெளியாகி அதன்சக்சஸ் மீட்டில் அடுத்த படம் பற்றி அறிவிக்க அன்பழகன் முடிவு செய்திருப்பதால் இப்போதைக்கு எந்த தகவலும் வெளியே வராமல் ரகசியம் காக்கிறார்கள்.

Tags »
Jayam ravi, Jeeva, SP.Jananathan, thooku thandanai, ஜெயம் ரவி, ஜீவா, எஸ்.பி.ஜனநாதன், தூக்கு தண்டனை,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in