ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவதாக உருவாகி வரும் படத்திலும் இணைந்துள்ளனர் அஜித், வினோத், போனி கபூர் கூட்டணி.. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் வெளிநாட்டிலும் மாறிமாறி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் கொக்கேன், வீரா ஆகியோர் நடிக்கின்றனர்.
வலிமை படத்தில் தெலுங்கு இளம் ஹீரோ கார்த்திகேயாவை தமிழுக்கு அழைத்து வந்து வில்லனாக்கியது போல இந்த படத்தில் தெலுங்கு வில்லன் நடிகர் அஜய் என்பவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அஜய் ஏற்கனவே தமிழில் அஜித் நடித்த கிரீடம் படத்தில் வில்லனாக நடித்தார். இதுதவிர மலைக்கோட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். விரைவில் புனேயில் தொடங்க இருக்கும் அடுத்த கட்ட படப்பிடிப்பில் அஜய் கலந்து கொள்வார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.