மே 17 ரிலீஸ் : இந்த வாரமும் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா? | நான் எந்தக் கட்சியும் சாராதவன் - அல்லு அர்ஜுன் விளக்கம் | மீண்டும் தமிழுக்கு வரும் திகங்கனா சூரியவன்ஷி | சினிமாவில் தொடர்ந்து நடிக்காதது ஏன் : மோகன் விளக்கம் | தமிழில் வெளியாகும் 'டபுள் ஐ-ஸ்மார்ட்' | பின்னணி பாடகர் வேல்முருகன் கைது | சின்னத்திரை : நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் மரணம் | புத்தகத்திற்கு பைபிள் பெயர் : கரீனா கபூருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் | இந்த ஆண்டில் கமல்ஹாசனின் 3 படங்கள் ரிலீஸ் | அன்னையர் தினத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ |
அஜித் நடித்த ‛கிரீடம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனான இவர் தொடர்ந்து மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா, தலைவி உள்ளிட்ட படங்களை இயக்கினார். நடிகை அமலாபாலை திருமணம் செய்து, பின்னர் அவரை விட்டு பிரிந்து விவாகரத்தும் செய்து கொண்டார். அதன் பின்னர் ஐஸ்வர்யா என்ற பெண்ணை மணந்தார்.
இந்நிலையில் இயக்குனர் விஜய்யின் தாயாரும், அழகப்பனின் மனைவியுமான வள்ளியம்மை இன்று(ஜூலை 17) காலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். விஜய்யின் சகோதரரான உதயாவும் தமிழில் ‛‛திருநெல்வேலி, தலைவா, ஆவி குமார், உத்தரவு மகாராஜா'' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் விஜய் வீட்டில் நிகழ்ந்த சோகத்திற்கு ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் ஆறுதல் கூறி உள்ளனர்.