நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய்சேதுபதி, காயத்ரி, குருசோமசுந்தரம் நடித்த மாமனிதன் படம் கடந்த மாதம் 14ம் தேதி தியேட்டரில் வெளியானது. சீனு ராமசாமி இயக்கிய இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து தயாரித்திருந்தார். இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைத்திருந்தார்கள். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசியதாது: இந்தப்படத்தை திரையரங்கில் தவற விட்டவர்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு, வீட்டில் இந்தப்படம் பார்ப்பவர்களுக்கு ராதாகிருஷ்ணன் நெருக்கமானவனாகிவிடுவான். மாமனிதன் குறித்து என்னிடமும் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது, ஆனால் எதற்கும் நான் பதில் சொல்லவில்லை. ஒரு கதாப்பாத்திரம் நீங்கள் எதிர்பார்ப்பது போல் நடக்க முடியாது. நடக்க தேவையில்லை. சீனு ராமசாமி போல் ஒரு படம் எடுக்க இங்கு யாரும் இல்லை. இந்தப்படம் நான் டப்பிங் பண்ணும் போது பார்க்கையில், அத்தனை உயிர்ப்புடன் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த படமாக இருந்தது. இந்தப் படம் காலத்தால் அழியாது, காலங்கள் கடந்து நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.